சாலையோர உணவகத்துக்குள் கார் புகுந்ததில் பள்ளி மாணவர் உள்பட 4 பேர் காயம்
திருநகரில் புதன்கிழமை சாலையோர உணவகத்திற்குள் கார் புகுந்ததில் பள்ளி மாணவர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.


திருநகரில் புதன்கிழமை சாலையோர உணவகத்திற்குள் கார் புகுந்ததில் பள்ளி மாணவர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
மதுரை அருகேயுள்ள திருநகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்.கார் ஓட்டுநர். இவர் தனது காரில் புதன்கிழமை மாலை மதுரைக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது திருநகர் 1 ஆவது பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், அவ்வழியே சைக்கிளில் சென்ற கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ராகுல் (16) மீது மோதி அருகில் இருந்த உணவகத்திற்குள் புகுந்தது. இதில் ராகுல், உணவகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் நடராஜன், இளையராஜா, செந்தில்குமார் ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ராகுல் திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...