உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த வழக்கில் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீப்பளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவர் தனது பேரன் கார்த்திக் உடன் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி குப்பணம்பட்டியில் மதுரை பிரதான சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது தேனியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கார்த்திக் மீது மோதி அவர் உயிரிழந்தார். இது குறித்து உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையப் போலீஸார், ஓட்டுநர் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 3,000 அபராதமும் விதித்து நீதிபதி விவேகானத்தன் தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.