மதுரையில் அரசு மருத்துவமனை ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை திருப்பாலை வஉசி நகரைச் சேர்ந்தவர் நாகபாண்டி(53). மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் இறந்ததை அடுத்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியப்பட்டிக்கு குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை சென்று விட்டார்.
அங்கு இறுதிச்சடங்குக்காக நாகபாண்டி அங்கேயே தங்கிவிட்டார். இந்நிலையில் நாகபாண்டியின் மூத்தமகள் கோதை நாயகி செவ்வாய்க்கிழமை தந்தை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு பீரோவில் உள்ள பொருள்கள் சிதறிக்கிடந்துள்ளன.
இதையடுத்து கோதைநாயகி அளித்தத் தகவலின்பேரில் நாகபாண்டி வீட்டுக்கு வந்து பொருள்களை சரிபார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.
இதுகுறித்து தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.