தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

சசிகலா புஷ்பாவின் கணவர் முன்ஜாமீன் கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு

சசிகலா புஷ்பா எம்பியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் முன்ஜாமீன் கோரி மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:50 am IST

சசிகலா புஷ்பா எம்பியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் முன்ஜாமீன் கோரி மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, ராமசாமி என்பவரை தில்லியில் மார்ச் 26-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ராமசாமி ஏற்கெனவே திருமணமானவர். இவரது முதல் மனைவி சத்யபிரியா, திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராமசாமிக்கு எதிராக புகார் அளித்தார். 
இந்தப்புகாரின் பேரில் ராமசாமி, அவரது சகோதரிகள் செல்வி மற்றும் பாரதி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராமசாமி உள்ளிட்ட மூவரும் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 
இந்த மனு நீதிபதி தீப்தி அறிவுநிதி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சத்யபிரியா தரப்பில் மனு செய்யப்பட்டது.மேலும் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி விசாரணையை ஏப். 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.