எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

திமுகவின் நடைபயணத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

திமுகவினரின் நடைபயணத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் என, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:34 am

திமுகவினரின் நடைபயணத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் என, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
     மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: காவிரி நதி நீர் பங்கீடு 100 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்னையாக உள்ளது. நீண்ட காலத்துக்குப் பின் உச்ச நீதிமன்றம் இப்பிரச்னைக்கு ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதை நடைமுறைப்படுத்த, தீர்ப்பின் வார்த்தைகளில் உள்ள பிரச்னைகள் மேலும் 100 ஆண்டுகளுக்கு நீடிக்கக் கூடாது என்பதற்காக விளக்கமாகக் கேட்கப்பட்டுள்ளது.
     காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தமிழகத்துக்கு தண்ணீர் தரவேண்டிய சூழல் வந்துவிடும் எனக் கூறியுள்ளார். இதற்கு, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். 
    அதேநேரம், அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாஜக வெற்றி பெற்றால், இரு மாநிலங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படுத்தப்படும் என்றும், காவிரி பிரச்னைக்கு தீர்வு காண்பேன் என்றும் கூறியுள்ளார். தமிழக விவசாயிகள் இதனை புரிந்துகொள்ளவேண்டும். 
     திமுக, காங்கிரஸ் கட்சியினர் நடைபயணத்தை நிறுத்துங்கள் என, விவசாயிகள் வலியுறுத்த வேண்டும். இலங்கை தமிழர் படுகொலை, மீனவர் பிரச்னை என 50 ஆண்டுகள் எங்களை ஏமாற்றியதுபோதும் என, தமிழக மக்கள் அவர்களிடம் கூறவேண்டும்.
    துணைவேந்தர் நியமனம் குறித்து, அதிமுக கடந்த ஜூலை மாதம் தமிழக சட்டப்பேரவையில் திருத்தங்கள் கொண்டு வந்தது. அப்போது திமுக எதுவும் பேசாமல், தற்போது அதனை எதிர்க்கின்றது. இவர்களின் இரட்டை வேடங்களுக்கு மக்கள் முடிவு கட்டவேண்டும். 
    காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு அவர் ஒதுக்கவில்லை என கூறாதபோது, பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என எதிர்க் கட்சியினர் குற்றம்சாட்டுவது சரியல்ல. இப்பிரச்னை தொடர்பாக, முதலில் அத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசிய பின்புதான் பிரதமரை சந்திக்கவேண்டும். இதனை மாற்றிக் கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.