போட்டி தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கான உறைவிடப் பயிற்சியில் பங்கேற்கும் மதுரை மாணவ, மாணவியருக்கு, அரசின் விலையில்லா மடிக்கணினிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் மாணவ, மாணவியரைப் போட்டித் தேர்வுகளுக்கு தகுதிப்படுத்தும் வகையில், 15 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், 350 மாணவ, மாணவியர் சேர்ந்து பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்றவர்களில் 289 மாணவ, மாணவியர் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு (நீட்) விண்ணப்பித்துள்ளனர்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில் சிறப்பு உறைவிடப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. மாநில அளவில் தமிழ், ஆங்கில வழிக்கல்வி என பிரித்து, 9 இடங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மதுரை மாவட்ட ஆங்கில வழிப் பயிற்சி மேற்கொள்ளவுள்ள மாணவர்கள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் சிறப்புப் பயிற்சியில் பங்கேற்கின்றனர். தமிழ் வழிப் பயிற்சி மேற்கொள்ளவுள்ள மாணவர்கள், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இப்பயிற்சியானது, திங்கள்கிழமை (ஏப்.9) முதல் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலிருந்து ஆங்கில வழிப் பயிற்சிக்கு 20 மாணவ, மாணவியரும், தமிழ் வழிப் பயிற்சிக்கு 74 மாணவ, மாணவியரும் செல்கின்றனர். ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்களில் மீதமுள்ள 195 மாணவ, மாணவியருக்கு, மதுரை பயிற்சி மையங்களிலேயே சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
போட்டித் தேர்வுக்கு பதிவு செய்த மாணவ, மாணவியர் 289 பேருக்கு பயிற்சி ஏடுகள் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் கொ. வீரராகவராவ் மடிக்கணினிகளை வழங்கினார். இதில், முதன்மைக் கல்வி அலுவலர் என். மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த இளம் பஞ்சாப் வீரர்!

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்: திருச்சி சிவா

ராணுவ மோதல்களால் பிரச்னைகளைத் தீர்க்க இயலாது: பிரதமர் மோடி!

கதாநாயகனான விக்கல்ஸ் விக்ரம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

