நகராட்சி ஒத்துழைக்காததால், மேலூர் இளைய தலைமுறை சேவை அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை துப்புரவுப் பணியை நிறுத்தினர்.
மேலூரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து இளைய தலைமுறை சேவை அமைப்பை நிறுவியுள்ளனர்.
இவர்கள், பனை மரக் கொட்டகைகளை நடுவது, துப்புரவுப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றனர். இந்த அமைப்பினர், மேலூரில் பெரியாறு கிளைக் கால்வாய்ப் பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றும் பணியை ஞாயிற்றுக்கிழமை துவங்கினர். பின்னர், மேலூர் நகராட்சி நிர்வாகத்தினர் ஒத்துழைக்கவில்லை எனக் கூறி, சேவைப் பணியை பாதியுடன் நிறுத்தினர்.
இது குறித்து இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் கூறுகையில், நகராட்சிக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்து விட்டுத்தான் பணியைத் தொடங்கினோம். இதற்காக, ஜேசிபி மற்றும் ஒரு டிராக்டரையும் வாடகைக்கு எடுத்து வந்தோம். ஆனால், நகராட்சி அலுவலர்கள் டிராக்டரை கொண்டுவந்து திரும்பிச் சென்றுவிட்டனர். எனவே, பணியை தொடர முடியவில்லை என்றார்.
நகராட்சி தரப்பில் கூறுகையில், காலை 9 மணிக்கு துப்புரவு பணியில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தனர்.
நீண்ட நேரமாக யாரும் வரவில்லை. மேலும், விடுமுறை தினம் என்பதால், காத்திருந்து பின் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

