/

வீரகாளியம்மன்கோயிலில் பங்குனி பொங்கல் விழா

மதுரை ஜெய்ஹிந்த்புரத்திலுள்ள வீரகாளியம்மன் திருக்கோயில் பங்குனி உற்சவத் திருவிழாவின் பொங்கல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:36 am

மதுரை ஜெய்ஹிந்த்புரத்திலுள்ள வீரகாளியம்மன் திருக்கோயில் பங்குனி உற்சவத் திருவிழாவின் பொங்கல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பிரசித்திபெற்ற வீரகாளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தீச்சட்டி ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி தெருக்களைச் சுற்றி வந்து, பின்னர் திருக்கோயிலில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.  ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கோயில் முன்பு நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களது குடும்பத்துடன் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். 
இரவில் அம்மன் பவனி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி சுமந்து வந்தனர். திங்கள்கிழமை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட பூஜைகள் நடைபெறவுள்ளன. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகக் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.