சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கு கல்வி தகுதி  நிர்ணயிக்கக் கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

Updated On :18 ஏப்ரல் 2018, 8:20 am IST

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என உத்தரவிடக்கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
 இதுதொடர்பாக மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ராஜிவ் ராஜா, ஹரிகிருஷ்ணன் உள்பட 5 பேர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
 அனைத்துத் துறைகளுக்கும் பணிக்கு செல்வதற்கு அடிப்படை கல்வித் தகுதி உள்ளது. ஆனால் உள்ளாட்சி, சட்டப்பேரவை,  நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு கல்வித் தகுதி ஏதும் இல்லை. தற்போது அனைத்து துறைகளிலும் கணினியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதற்கு கணினி குறித்த அடிப்படை அறிவு அவசியம். ஆனால், ஆட்சியாளர்களின் கல்வித் தகுதி குறித்து எந்தவிதமான வழிகாட்டுதல்களும் இல்லை. 
பிகார், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலில் கல்வித் தகுதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 எனவே, தமிழகத்திலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளங்கலை பட்டப் படிப்பை நிர்ணயிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
 இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
 மனுவை விசாரித்த நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.