மேலூர் அருகே முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதியதில், அதில் பயணித்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.
திருநெல்வேலி அருகே உள்ள பணங்குடியைச் சேர்ந்தவர் ஆண்டனி கருத்தராஜ். இவர், குடும்பத்தினருடன் சென்னை ஆதம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர்கள் காரில் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கொட்டாம்பட்டியை அடுத்துள்ள பள்ளபட்டி பகுதியில் முன்னாள் சென்ற லாரி மீது மோதியதில், அவரது மகன் சாமுவேல்தானி (13) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும், ஆண்டனி கருத்தராஜ், சரோஜா, பிரியதர்ஷினி, பிரசன்னா ஆகியோர் காயமடைந்தனர். இவர்களுக்கு மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.