மதுரையில் இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில், விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரை அருகே உள்ள செக்கானூரணி புளியங்குளத்தைச் சேர்ந்த தங்கம் மகன் விவசாயி பழனிக்குமார் (39). இவர் தனது உறவினரான சின்னச்சாமி என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை மதுரைக்கு வந்துள்ளார். விராட்டிபத்து அருகே வந்துகொண்டிருந்த போது, மதுரையில் இருந்து தேனி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மோதியது. இதில், பழனிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உறவினர் சின்னச்சாமி பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பழனிக்குமார் உறவினர் கிருஷ்ணகுமார் அளித்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.