2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

குடிநீர் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

மதுரை நகரில் குடிநீர் பிரச்னையை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்துள்ளார். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:12 am

DIN

மதுரை நகரில் குடிநீர் பிரச்னையை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்துள்ளார். 
       மதுரை பழங்காநத்தத்திலிருந்து எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்துக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நகரின் போக்குவரத்து 
தேவைக்கு ஏற்பவே தற்போது புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரை மாநகராட்சியானது விரிவாகிக் கொண்டே இருக்கிறது. மாநகராட்சி விரிவாக்கத்துக்கு ஏற்ப குடிநீர் உள்ளிட்ட வசதிகளையும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டியிருக்கிறது. மதுரை மாநகராட்சி பகுதியில் 50 ஆண்டுக்கான குடிநீர் தேவைக்கேற்பவே முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 
     மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மதுரையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது.  நகரில் குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்பு போன்ற பிரச்னைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
மதுரையில் அனைத்துப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்.
     சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை முதல்வரே வரவேற்றுள்ளார். அதற்கும் மேலாகக் கூறுவதற்கு எதுவுமில்லை என்றார்.
     முன்னதாக, அவர் பச்சைக் கொடியசைத்து புதிய வழிப் பேருந்தை தொடக்கிவைத்தார். இதில், முன்னாள் மேயர் (பொறுப்பு) கு. திரவியம், அதிமுக நிர்வாகி துரைப்பாண்டி, தங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.