400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

"தவறான நோக்கில் தொடுபவர்கள் குறித்து பெற்றோரிடம் குழந்தைகள் கூறவேண்டும்'

தவறான நோக்குடன் தங்களைத் தொடுபவர்கள் குறித்து குழந்தைகள் பயமின்றி தங்களது பெற்றோர் அல்லது பெரியவர்களிடம் கூற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவுரை வழங்கினார்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 7:43 am IST

தவறான நோக்குடன் தங்களைத் தொடுபவர்கள் குறித்து குழந்தைகள் பயமின்றி தங்களது பெற்றோர் அல்லது பெரியவர்களிடம் கூற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவுரை வழங்கினார்.
 மதுரையில் யங் இந்தியன்ஸ் அமைப்பு, யுனிசெப் சார்பில் குழந்தைகளுக்கான தொடுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் "மாசூம்' எனும் குறும்படம் வெளியீட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சர்வேயர் காலனியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் அனிமேஷன் குறும்படத்தை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுபேசியதாவது: 
தற்போதைய சூழலில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அனிமேஷன் வீடியோ படம் வெளியிடுவது பாராட்டுக்குரியது. குழந்தைகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வை கல்வி மூலம் ஏற்படுத்தவேண்டும். 
 குழந்தைகளிடம் தவறான நோக்குடன் நடந்துகொள்பவர்கள் குறித்தும்,  தவறான எண்ணத்துடன் தொடுபவர்கள் குறித்தும் அவர்கள் பயமின்றி தங்களது பெற்றோர்களிடமோ, தங்களது குடும்பத்துடன் நெருக்கமான பெரியவர்களிடமோ, ஆசிரியர்களிடமோ கூறவேண்டும். 
 குழந்தைகள் நலன் மற்றும் அவர்களுக்கான பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் 1098 என்ற தனி சிறப்பு தொலைபேசி எண் செயல்பட்டுவருகிறது. அந்த தொலைபேசி எண்ணை மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் அறிந்திருப்பது அவசியம் என்றார்.
 நிகழ்ச்சியில் மகாத்மா பள்ளி தாளாளர் பிரேமலதா மற்றும் யுனிசெப் தகவல் தொடர்பாளர் சுகதாராய் ஆகியோர் சிறப்புரையாற்றினர். குழந்தைகளுக்கான பாதுகாப்பை விளக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட தொடுதல் குறித்த விழிப்புணர்வுக்கான அனிமேஷன் குறும்படம் திரையிடப்பட்டது.
 நிகழ்ச்சியில் யங் இந்தியா 
மதுரைக்கிளையின் தலைவர் டி.குணசேகர் வரவேற்றார். மாசூம் குறும்பட திட்ட இயக்குநர் பூர்ணிமா வெங்கடேஷ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.