சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

போலீஸ் போல நடித்து பெண்ணிடம் 3 பவுன் நகை திருட்டு

மதுரையில் பெண்ணிடம் போலீஸ் போல நடித்து 3 பவுன் நகையை திருடிச்சென்ற இருவர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On :

மதுரையில் பெண்ணிடம் போலீஸ் போல நடித்து 3 பவுன் நகையை திருடிச்சென்ற இருவர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை நரிமேடு பிரசாத் சாலையைச் சேர்ந்த தேவராஜ் மனைவி எஸ்தர் (62). இவர் நரிமேடு கதீட்ரல் தேவாலயம் வழியாக ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இருவர் எஸ்தரை வழிமறித்து, தங்களை போலீஸார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் அப்பகுதியில் சற்று முன்னர் சங்கிலி பறிப்பு நடந்தாகவும்,  கழுத்தில் நகையுடன் தனியாக செல்ல வேண்டாம் என்று கூறி, எஸ்தர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை வாங்கி காகிதத்தில் மடித்துக் கொடுத்துள்ளனர். அதை வாங்கிய எஸ்தர் வீட்டுக்குச் சென்ற பின்னர் காகிதத்தை பிரித்துப்பார்த்துள்ளார். அப்போது காகிதத்தில் சங்கிலிக்கு பதிலாக கற்கள் மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த எஸ்தர் சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.