ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

விளையாட்டுப் போட்டி: பரிசளிப்பு விழா

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது.

Updated On :

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது.
மதுரை எம்.ஜி.ஆர்.விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர், அலுவலர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் கி.த.ராஜகுமார் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். ஆண்களுக்கு கைப்பந்து, கபடியும், பெண்களுக்கு எறிபந்து போட்டிகளும் நடைபெற்றன. வாலிபால் போட்டிகளில் நீலகிரி, வாணிபக்கழக தலைமை அலுவலக அணி, கன்னியாகுமரி ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பெற்றன. கபடியில் தஞ்சை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பெற்றன.
பெண்களுக்கான எறிபந்துப் போட்டியில் தலைமை அலுவலக அணி, நீலகிரி, சென்னை மண்டலம் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பெற்றன.  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் பொதுமேலாளர் (நிர்வாகம்) ச.செளந்தரவள்ளி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தார். 
நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கூடைப்பந்து பயிற்சியாளர் கே.ராஜா, பாரா ஒலிம்பிக் பயிற்சியாளர் ரஞ்சித், கைப்பந்து பயிற்சியாளர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.