மதுரை வைகையாற்றில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற இருவரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி நகை, ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்லிடப்பேசிகளை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் விநாயகர் நகரைச் சேர்ந்தவர் குமார்(56). மதுரையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக புதன்கிழமை மதுரை வந்துள்ளார். அங்கு வைகை ஆற்றில் நடந்த இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனது உறவினருடன் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூவர் கத்தியைக்காட்டி மிரட்டி குமார் மற்றும் அவரது உறவினரிடம் இருந்து 2 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்றனர். சம்பவம் தொடர்பாக குமார் அளித்தப் புகாரின் பேரில் கரிமேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
சிவகாசி அருகே பட்டாசுகள் பதுக்கிய மூவா் கைது

சிவகங்கை வட்டாரத்தில் கலைத் திருவிழா போட்டிகள்
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!


