உசிலம்பட்டி அருகே பழங்குடியினர் சான்றிதழ் வழங்கக்கோரி அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள வடுகபட்டியில் சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் தங்களுக்கு பழங்குடியினர் (டி .என்.டி ) சான்றிதழ் வழங்கக்கோரி திங்கள்கிழமையிலிருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். புதன்கிழமை உரிய அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தக்கூடாது என உத்தரவிட்ட உசிலம்பட்டி போலீஸாரைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்த சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் ஆதிசேடன், தவமணிதேவி, தமிழ்செல்வி, அன்பரசன், தவம், ஆகிய 5 பேரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதைக் கண்டித்து வடுகபட்டி கிராம மக்கள் மற்றும் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மதுரை- தேனி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தகவலறிந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து உரிய அனுமதி பெறாமல் எந்தவொரு போராட்டங்களும் நடத்தக்கூடாது என எச்சரித்து விசாரணைக்கு அழைத்துச் சென்ற 5 பேரையும் போலீஸார் விடுவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






