இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

லட்சுமிசுந்தரம் ஹாலில் நாளை முதல் மகான்களின் முகாம் தமிழ் நாடக விழா

மதுரை லட்சுமிசுந்தரம் ஹாலில் வெள்ளிக்கிழமை முதல் (ஆக.31) மகான்களின் முகாம் தமிழ் நாடகவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

மதுரை லட்சுமிசுந்தரம் ஹாலில் வெள்ளிக்கிழமை முதல் (ஆக.31) மகான்களின் முகாம் தமிழ் நாடகவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 இதுகுறித்து ஸ்ரீ சத்குரு சங்கீதசமாஜம் கெளரவச் செயலர் எஸ்.வெங்கடநாராயணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத சமாஜம் மற்றும் மகாலட்சுமி பெண்கள் நாடகக்குழு டிரஸ்டும், பாம்பே ஞானம் குழுவினரும் இணைந்து மகான்களின் முகாம் தமிழ் நாடக விழாவை நடத்தவுள்ளனர்.
 நாடக விழாவின் முதல் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை (ஆக.31) மாலை 6.30 மணிக்கு ஆதி சங்கரர் அருளிய பஜகோவிந்தம் நாடகம் நடைபெறுகிறது. பஜகோவிந்தம் என்பது சமஸ்கிருத மொழியில் ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட எட்டாம் நூற்றாண்டு பக்திப் பாடலாகும். பாம்பே ஞானம் இயக்கத்தில் அவரது மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழுவினர் பஜகோவிந்தம் நாடகத்தை வழங்குகிறார்கள். 
 சனிக்கிழமை (செப்.1) அன்று மாலையில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமஸ்கிருத பண்டிதர் பக்த ஜெயதேவரின் 24 அஷ்டபதிகளை மையமாக வைத்து பக்தஜெபதேவர் நாடகம் நடத்தப்படுகிறது. ஜெயதேவர் வாழ்க்கை தொகுப்பாகவே நாடகக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் பகவான் ஸ்ரீ ரமணரின் உபதேசங்களை மையமாக வைத்து பகவான் ஸ்ரீ ரமணர் நாடகம் நடத்தப்படுகிறது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.