மதுரையில் பேருந்தின் படியில் இருந்து தவறி விழுந்தவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், பரளிபுதூரை சேர்ந்த பாஸ்கர் மகன் சுந்தரமூர்த்தி (38). இவர் திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையத்துக்கு அரசுப்பேருந்தில் திங்கள்கிழமை அதிகாலை பயணம் செய்துள்ளார். அப்பேருந்து பழங்காநத்தம் பகுதியில் சென்றபோது சுந்தரமூர்த்திக்கு வாந்தி வந்ததால் பேருந்தின் படிக்கட்டில் சென்று அமர்ந்துள்ளார். அப்போது தவறி கீழே விழுந்த சுந்தரமூர்த்தி பலத்த காயமடைந்தார்.
அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சுந்தரமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சுந்தரமூர்த்தியின் சகோதரி மாரீஸ்வரி (28) அளித்த புகாரின்பேரில் போலீஸார், பேருந்து ஓட்டுநர் கணேசன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








