மதுரைக் கோட்டத்தில் பொங்கல் திருநாள் மற்றும் வார இறுதி என 56 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சுவிதா சிறப்பு ரயில்: சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயில், ஜனவரி 1, 15-ஆம் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, தென்காசி, கடையநல்லூர், பாம்புக்கோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, செட்டிநாடு, புதுக்கோட்டை, திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் வழியாகச் சென்று மறுநாள் காலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடைகிறது.
சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்கள்: சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண்- 06011) 2018 டிசம்பர் 31 முதல் 2019 பிப்ரவரி 25ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் மட்டும், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.40-மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டையை அடைகிறது.
இதேபோல், செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண்- 06012) 2019 ஜனவரி 8, 22, 29 மற்றும் பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மட்டும் செங்கோட்டையில் மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடைகிறது.
இந்த ரயில்கள், தென்காசி, கடையநல்லூர், பாம்புக்கோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, செட்டிநாடு, புதுக்கோட்டை, திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ஆகிய நிறுத்தங்களில் இருமார்க்கங்களிலும் நின்று செல்லும்.
திருநெல்வேலி - தாம்பரம் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்: திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் வரை செல்லும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண்- 06004) திருநெல்வேலியில் ஜனவரி 12ஆம் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாகச் சென்று, மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு தாம்பரத்தை சென்றடைகிறது.
திருநெல்வேலி - சென்னை சுவிதா சிறப்பு ரயில்: திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரம் செல்லும் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண்- 82606) திருநெல்வேலியில் ஜனவரி 16ஆம் தேதி மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது.
தாம்பரம் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில்: தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண்- 82605) ஜனவரி 13ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.30 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடைகிறது.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில்கள்: சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 25, பிப்ரவரி 15ஆம் தேதிகளில் இரவு 10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (வண்டி எண்- 82625), மறுநாள் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 12ஆம் தேதி இரவு 10.20 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண். 82611), மறுநாள் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 11, பிப்ரவரி 8ஆம் தேதிகளில் இரவு 10.15 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண்- 82601), மறுநாள் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது.
இதேபோல், திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 6, 27ஆம் தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண்- 82626), மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடைகிறது.
திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 15ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண்- 82612), மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடைகிறது.
திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 10, பிப்ரவரி 17ஆம் தேதிகளில் பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண்- 82602), மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடைகிறது.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்கள்: சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண்- 06001) ஜனவரி 4, 18 மற்றும் பிப்ரவரி 1, 22 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.20-மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது.
திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண்- 06002) பிப்ரவரி 3, 24 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது.
சுவிதா மற்றும் சிறப்புக் கட்டண ரயில்கள் அனைத்தும், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு நிலையங்களில் இருமார்க்கங்களிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் சுவிதா சிறப்பு ரயில்: நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண்- 82644), நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 2, 16 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடைகிறது.
சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு கட்டண சிறப்பு ரயில்: சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண்- 06007), சென்னை சென்ட்ரலில் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் மாலை 7 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவிலை அடைகிறது.
இந்த ரயில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பலூர் வழியாக இரு மார்க்கங்களிலும் சென்று வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவு: அன்புமணி இரங்கல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல இன்னொருவர் இல்லை: ஊர்வசி





