கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை திருட்டு

மதுரையில் பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ.52 ஆயிரம் ரொக்கத்தை அடையாளம்

Updated On :25 டிசம்பர் 2018, 8:16 am IST

மதுரையில் பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ.52 ஆயிரம் ரொக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 மதுரை குலமங்கலம் அருகே உள்ள கோசாகுளம் என்.பி.நகரைச் சேர்ந்தவர் ஜோதிநாதன்(55). பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பினார்.
 அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 16 பவுன் நகை, ரூ. 52 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக ஜோதிநாதன் அளித்த புகாரின்பேரில் கூடல்புதூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.