திருநகரில் மாநில ஹாக்கி போட்டிகள் தொடக்கம்
திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் திருநகர் அண்ணா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.


திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் திருநகர் அண்ணா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
பாலசுப்பிரமணியன், ஜெய்சிங், பழனியாண்டவர், மெய்யப்பன் நினைவு 19-ஆவது ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டியை மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜ்குமார், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை போதை தடுப்புக் காவல் கண்காணிப்பாளர் பி.எஸ். ராமகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். இதில் மதுரை மாவட்ட ஹாக்கி கிளப் தலைவர் ஏ.ஜி. கண்ணன், திருநகர் ஹாக்கி கிளப் செயலாளர் ஆர். ரமேஷ், தலைவர் ஆர். பாலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 28 அணிகள் பங்கேற்கின்றன. வரும் 11-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.
முதல் ஆட்டத்தில் ராமநாதபுரம் டவுன் ஹாக்கி கிளப் அணியும், சப் ஜூனியர் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணியும் மோதின. இதில் 3 - 2 என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம் ஹாக்கி கிளப் அணி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் பெஸ்ட் பிரண்ட்ஸ் ராஜபாளையம் அணியும், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஹாக்கி அணியும் மோதின. இதில் 1 -0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி அணி வெற்றி பெற்றது. மாலையில் சங்ககிரி எஸ்.எஸ்.ஓ.எஸ். வாரியார் அணி, திருச்சி சோழாஸ் ஹாக்கி கிளப்
அணியினரும் மோதின. இதில் 2 - 0 என்ற கணக்கில் சங்ககிரி எஸ்.எஸ்.ஓ.எஸ். அணி வெற்றிபெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் கிருஷ்ணகிரி ஹாக்கி கிளப் அணியும், வாடிப்பட்டி எச்.எக்சலன்சி அணியும் மோதின. இதில் இரு அணியினரும் 2 -2 என சமநிலையில் போட்டி முடிந்தது. பின்னர் சடன் டெத் முறையில் கிருஷ்ணகிரி ஹாக்கி கிளப் அணி வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...