கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெவ்வேறு விபத்துக்களில் இருவர் சாவு

மேலூர் அருகே புதன்கிழமை நடைபெற்ற வெவ்வேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்தனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:44 am

DIN

மேலூர் அருகே புதன்கிழமை நடைபெற்ற வெவ்வேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்தனர்.
மேலூர் நொண்டிக்கோவில்பட்டியில் மணல் லாரி பின்னோக்கி இயக்கப்பட்ட போது அப்பகுதியில் நடந்து வந்த மூதாட்டி அந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். விசாரணையில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த புங்கன் மனைவி பாண்டியம்மாள் (70) எனத் தெரியவந்தது.
இதையடுத்து அந்த லாரியின் ஓட்டுநர் திருப்புவனத்தைச் சேர்ந்த சூரியகுமாரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 அதே போல் மேலூர்- மதுரை சாலையில் கத்தப்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் கல்லல் புதூரைச் சேர்ந்த மாரியப்பன் (68) என்பதும், அருகிலுள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் அவரது மகனைப் பார்க்க வந்திருந்தும் தெரியவந்தது. இந்த இரு விபத்துக்கள் குறித்து மேலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.