வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தொழிலதிபரிடம் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிப்பு

மதுரையில் தொழிலதிபரை தாக்கி ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் நகைகளை பறித்துச் சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:43 am

DIN

மதுரையில் தொழிலதிபரை தாக்கி ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் நகைகளை பறித்துச் சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை தாசில்தார் நகர் வ.உ.சி. முதலாவது தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் காஜா மைதீன் (73). இவரது மகன் நிவாஸ். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு  சுந்தரம் பூங்கா வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரிடம்  அடையாளம் தெரியாத இளைஞர் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். அவரை நிவாஸ் ஏற்றிச்சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவருடன் சேர்ந்து நிவாஸை தாக்கி சுந்தரம் பூங்காவுக்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் அணிந்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
சம்பவம் தொடர்பாக காஜா மைதீன் அளித்தப்புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.