மதுரை வெவ்வேறு சம்பவங்களில் 50 பவுன் நகைகள் திருடப்பட்டதாக போலீஸார் 6 மாதங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
மதுரை அண்ணாநகர்,தெற்குவாசல் காவல்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக பல்வேறு நகைத்திருட்டுகள் நடைபெற்றுள்ளன. புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீஸார் தற்போது வழக்குப்பதிவுசெய்துள்ளனர். மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரத்னா(49). இவர் கடந்த ஏப்ரல் மாதம் மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்துநிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது 14 பவுன் நகையுடன் இவர் வைத்திருந்த பையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர்.
சென்னை ஆழ்வார் திருநகரியைச்சேர்ந்தவர் அன்னச்சாமி(63). இவர் திருச்சி செல்லும் பேருந்தில் கடந்த நவம்பர் மாதம் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்த பையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர். பையில் 20 பவுன் நகைகள் இருந்ததாக அன்னச்சாமி புகார் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தமறாக்கியைச் சேர்ந்தவர் சகானா(25). இவர் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை காண மே 1-ஆம் தேதி வந்துள்ளார். வண்டியூர் பகுதியில் அழகரை தரிசனம் செய்தபோது கூட்ட நெரிசலில் சகானா அணிந்துள்ள 6 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர்.
இந்தப்புகார்கள் தொடர்பாக அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை அழகப்பன்நகர் பாரதியார் நகரைச்சேர்ந்தவர் தேன்மொழி(53). அவர் கடந்த மே 28-ஆம் தேதி அழகப்பன் நகர் ரயில்வே கடவு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தேன்மொழி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் சுப்ரமணியபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருக்கியில் 2-ஆவது நாளாக பள்ளி துப்பாக்கிச் சூடு- 9 போ் உயிரிழப்பு

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை கெளதமி பிரசாரம்

நாளை மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல்

கிராமங்களில் அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்படும்: பிரேமலதா விஜயகாந்த்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

