மதுரையில் குடும்பத்தகராறில் மைத்துனரை கத்தியால் குத்திய வங்கி வீட்டுக்கடன் பிரிவு மேலாளரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுரை சக்கிமங்கலம் சிருதூரைச் சேர்ந்தவர் அழகர்சாமி(36). தனியார் வங்கி வீட்டுக்கடன் வசூல் பிரிவு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். திருமணமான இவருக்கு பல பெண்களுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதை அவருடைய மனைவி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அழகர்சாமியின் மனைவியின் சகோதரர் செல்வகுமார்(43), இப்பிரச்னை தொடர்பாக அழகர்சாமியிடம் பேசச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்டத் தகராறில் ஆத்திரமடைந்த அழகர்சாமி கத்தியால் செல்வகுமாரின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த செல்வகுமார் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக செல்வக்குமார் அளித்தப் புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அழகர்சாமியை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








