வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

மருத்துவமனை காவலாளி மர்மச் சாவு

மதுரையில் தனியார் மருத்துவமனை காவலாளி கிணற்றில் மர்மமாக இறந்து கிடந்ததாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :23 ஜூலை 2018, 5:58 am IST

மதுரையில் தனியார் மருத்துவமனை காவலாளி கிணற்றில் மர்மமாக இறந்து கிடந்ததாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
   மதுரை ஆண்டாள் கொட்டாரத்தை சேர்ந்தவர் மலைச்சாமி 65). இவர் ராமநாதபுரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வேலைக்குச்சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் மலைச்சாமி குறித்த தகவல் கிடைக்கவில்லை. 
  இதையடுத்து அவர் மனைவி இருளாயி அளித்தப் புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கிணற்றில் மலைச்சாமியின் சடலம் மிதந்தது. தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச்சென்று மலைச்சாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் மலைச்சாமி கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.