மேலூரில் பொதுப் பாதை ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார்

மேலூரில் பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் அளித்தனர்.
Updated on
1 min read

மேலூரில் பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் அளித்தனர்.
இதுகுறித்து அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மேலூர் நகராட்சி மூவேந்தர் நகரில் குடியிருப்புக் கட்டடம் கட்ட 23 அடி பாதையாகக் காண்பிக்கப்பட்டு நகராட்சியால் கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதிக்கு மாறாக பொதுப் பாதை ஆக்கிரமிக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
இந்த பொதுப் பாதை வழியாகவே நகராட்சியின் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் ஒரு வீட்டை கிரையம் பெற்றுள்ள ஒரு நபர் மீண்டும் பொதுப் பாதையை தனக்குச் சொந்தமானது எனக் கூறி பொதுமக்கள் சென்றுவர முடியாதபடி தடை ஏற்படுத்தியுள்ளார். இதனால் இந்த வீட்டைத் தாண்டியுள்ள 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதை வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, பொதுப் பாதையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com