மதுரையில் வணிகவரித்துறையில் பணி நியமனம் செய்ததாக போலியாக அரசு ஆணை வழங்கி ரூ.50 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை டிஆர்ஓ காலனியைச் சேர்ந்தவர் தங்கவேலு. வடக்குச்சித்திரை வீதியில் ஜவுளிக்கடை நடத்தி வரும் இவரது கடைக்கு, நாகமலைபுதுக்கோட்டை ராஜம்பாடி பகுதியைச் சேர்ந்த மீனா (35) கடந்த 2016-இல் ஜவுளி வாங்குவதற்கு வந்தபோது அறிமுகமானார். அப்போது மீனா மதுரையில் உள்ள வணிகவரித்துறையில் அதிகாரியாக பணிபுரிவதாகவும், தனது குடும்பத்தினர் நாகமலைபுதுக்கோட்டையில் தீம் என்ற பெயரில் பல்பொருள் அங்காடியும், திருநகரில் தீம் மசாலா நிறுவனமும் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அடிக்கடி ஜவுளி வாங்குவதற்கு சென்ற மீனா, தனக்கு வணிகவரித்துறையின் உயர்அதிகாரிகளுடன் பழக்கம் இருப்பதாகவும், அதை பயன்படுத்தி வணிகவரித்துறையில் சிலருக்கு வேலை வாங்கித் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தங்கவேலுவுக்கும் வணிகவரித்துறையில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.50 லட்சம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மீனாவை நம்பிய தங்கவேலு தனது உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலரிடம் ரூ.50 லட்சம் கடன் வாங்கி, அந்தத் தொகையை மீனாவின் வங்கிக்கணக்கில் பல தவணைகளில் செலுத்தியுள்ளார்.
இதையடுத்து 2017 ஜனவரியில் மீனா, வணிகவரித்துறையில் பணி நியமன ஆணையை தங்கவேலுவிடம் வழங்கியுள்ளார். அரசுப்பணி நியமன ஆணையுடன், மதுரையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்துக்கு சென்ற தங்கவேலு, அங்கு அதிகாரிகளிடம் அதனை காண்பித்துள்ளார். அதிகாரிகள் அதனை வாங்கிப் பார்த்தபோது, அது போலி பணி நியமன ஆணை என தெரியவந்தது.
இதையடுத்து, மீனாவிடம் இதுதொடர்பாக தங்கவேலு கேட்டுள்ளார். இதற்கு, சில மாதங்களில் மீண்டும் நியமன ஆணை வாங்கித் தருவதாக மீனா கூறியுள்ளார். ஆனால் கூறிய படி, பணி நியமன ஆணை வழங்காததால், தான் அளித்த ரூ.50 லட்சத்தை திருப்பித்தருமாறு தங்கவேலு கேட்டுள்ளார். ஆனால், பணத்தையும் தராமல் மீனா அலைக்கழித்துள்ளார்.
இதையடுத்து, இதுதொடர்பாக மீனா மீது ஊரகக்காவல் கண்காணிப்பாளரிடம் தங்கவேலு புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான போலீஸார் மீனாவிடம் விசாரணை நடத்தினர்.
இதில் தங்கவேலு உள்பட பலரிடம் மீனா போலியாக பணி நியமன ஆணையை வழங்கி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மீனாவை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

