உசிலம்பட்டியில் வயர்மேனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மின் வாரிய அலுவலகத்தில் சக ஊழியர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டியை அடுத்த வாலாந்தூரைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன். வயர்மேனான இவரிடம் வாலாந்தூரைச் சேர்ந்த அக்கினி மகன் உக்கிரபாண்டி, அடிக்கடி ஏன் மின்தடை ஏற்படுகிறது' எனக் கேட்டு, கடந்த சனிக்கிழமை தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி, கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வாலாந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உக்கிரபாண்டி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், வயர்மேன் ஜெயகிருஷ்ணன் தாக்கப்பட்டதை கண்டித்தும், உக்கிரபாண்டி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உசிலம்பட்டி மின்சார வாரிய உற்பத்தி மற்றும் மின் பகிர்மான அலுவலகத்தில் உசிலம்பட்டி மற்றும் வாலாந்தூர் மின்வாரிய ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை காலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் இப்போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?

ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் முதல் பெண் பயிற்சியாளர்!

பிகார் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு!

தவெக பிரசாரத்தில் மயங்கிய திருப்பூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

