சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

காவல் சார்பு-ஆய்வாளரை தாக்க முயன்றதாக இளைஞர்கள் இருவர் கைது

வாடிப்பட்டியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் சார்பு-ஆய்வாளரைத் தாக்க முயன்றதாக இளைஞர்கள் இருவரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :21 மே 2018, 1:08 am

வாடிப்பட்டியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் சார்பு-ஆய்வாளரைத் தாக்க முயன்றதாக இளைஞர்கள் இருவரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பாக, நகர் காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி வாகனத்துக்குரிய ஆவணங்களை கேட்டுள்ளனர். இதில், சார்பு ஆய்வாளர் பழனிச்சாமிக்கும், வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சார்பு-ஆய்வாளரை இருவரும் தாக்க முயன்றனாரம்.  இது குறித்து சார்பு-ஆய்வாளர் பழனிச்சாமி அளித்த புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வாடிப்பட்டி நாயக்கர் தெருவைச் சேர்ந்த தர்மராஜ் (21) மற்றும் எஸ்.பெருமாள்பட்டியைச் சேர்ந் மணிகண்டன்(20) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.