மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பைக்குகள் மோதல்: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாவு

மதுரையில் இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சனிக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :21 மே 2018, 1:10 am

மதுரையில் இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சனிக்கிழமை உயிரிழந்தார்.
     மதுரை மேலவாசல் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர்  மதுரை வீரன் (45). நாம் தமிழர் கட்சியின் கிளை பொறுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், மதுரை வீரன் மற்றும் இவரது நண்பர் போஸ் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் முத்து மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர்.அப்போது, அவ்வழியாக மானாமதுரையைச் சேர்ந்த சஞ்சீவி (42), அவரது மனைவி சண்முகப்பிரியா ஆகியோர் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது, மதுரை வீரன் ஓட்டிச்சென்ற வாகனம் மோதியுள்ளது. இதில், மதுரை வீரன், போஸ் மற்றும் சஞ்சீவி, சண்முகப்பிரியா ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.
    உடனே, அப்பகுதியினர் 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி மதுரை வீரன் உயிரிழந்தார். இது குறித்து சஞ்சீவி அளித்த புகாரின்பேரில், போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.