மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆரப்பாளையம் பகுதியில் இன்று மின்தடை

கோவில், ஆரப்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில்

Updated On :21 மே 2018, 11:10 pm

கோவில், ஆரப்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: கீழ ஆவணி மூல வீதி, தளவாய் வீதி, எழுகடல் அக்ரஹாரம், தெற்கு ஆவணி மூல வீதி, கீழமாசி வீதி, வெங்கலக்கடைத் தெரு, நேதாஜி சாலை, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பல வீதி, கீழ சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு, யானைக்கல் தெரு, திருமலைராயர் படித்துறை பகுதி, வடக்கு வெளி வீதி தெற்கு பகுதி.
புட்டுத்தோப்பு தெரு, சுடுதண்ணீர் வாய்க்கால் சாலை, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் பேருந்து நிலையம், பொன்னகரம் பகுதி, அழகரடி, மோதிலால் பிரதான சாலை, ராஜேந்திரா பிரதான சாலை, மேலப்பொன்னகரம் சாலை, கனகவேல் காலனி, ஆறுமுகச்சந்தி, ஆட்டுமந்தை பொட்டல், சிம்மக்கல், வடக்குவெளி வீதி, ராஜா மில் சாலை, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, காலேஜ் ஹவுஸ்.
மதுரையில் நடைபாதை பணிகளை
ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு
மதுரை, மே 21: மதுரையில் நடைபாதை அமைக்கும் பணிகளை ஒரு வாரத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் திங்கள்கிழமை டவுன்ஹால் சாலை, மேலக்கோபுரத் தெரு, வெங்கலக்கடைத் தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது ரயில்நிலையம் முதல் மகால் வரை அமைக்கப்படும் பாரம்பரிய நடைபாதை பணியை நேரில் பார்வையிட்டார். டவுன்ஹால் சாலை பகுதியில் பேவர் பிளாக் அமைக்கும் பணியை பார்வையிட்ட ஆணையர், ஒரு வார காலத்தில் அப்பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், தெற்கு மாசி வீதியில் பாதாள சாக்கடை பிரதான குழாயில் ஏற்பட்ட அடைப்பால் பாண்டிய வேளாளர் தெரு, காஜிமார் தெரு, தெற்கு வடம்போக்கி தெரு ஆகிய பகுதியில் கழிவு நீர் தேங்கியுள்ளதாக புகார் எழுந்தது.
அங்கு சென்று நேரில் பார்வையிட்ட ஆணையர் அனீஷ் சேகர், சாக்கடை அடைப்பை சீர்செய்ய உத்தரவிட்டு, பணியை துரிதப்படுத்தினார். பாண்டியவேளாளர் தெருவில் ஆய்வின்போது, நடைபாதையில் உணவகம் செயல்பட்டதுடன், அங்கு சுகாதாரமற்ற நிலை இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க சுகாதார அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, விளாச்சேரி பகுதியிலும், முனியாண்டிபுரத்தில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் தார்ச்சாலை பணிகளையும் ஆணையர் பார்வையிட்டார்.
இன்று குறைதீர்க்கும் முகாம்: மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 3 (கிழக்கு) அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெறுகிறது. ஆணையர் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று, தங்களது குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம் என மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.