சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

தூத்துக்குடி சம்பவத்துக்கு எதிராக  8 மனுக்கள் தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை, உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோருதல், இணையதள சேவை முடக்கத்தை ரத்து

Updated On :25 மே 2018, 4:31 am IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை, உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோருதல், இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்யக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வழக்குரைஞர்கள், சமூக ஆர்வலர்கள் 8 பேர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குரைஞர்கள் முத்துக்குமார், ரஜினி, மதுரையைச் சேர்ந்த சையது அப்துல் கதிர், ஒத்தக்கடையைச் சேர்ந்த எழிலரசு, கோவில்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி, சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், மதுரை பி.பி.குளத்தைச் சேர்ந்த கதிரேசன், ராஜ்குமார் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அதில், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கலவரங்களை கட்டுப்படுத்துவதாகக் கூறி இணையதள சேவையை முடக்கியுள்ளனர். இதனால் பொறியியல் மற்றும் பிறகல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை டிஐஜி, எஸ்.பி. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பணியில் இருந்து விடுவித்து, தற்போது பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
மேலும் இச்சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுக்கள் வெள்ளிக்கிழமை (மே 25) விசாரணைக்கு வரவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.