இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மதுரை அருகே விபத்தில் மகன் சாவு: தந்தை காயம்

மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Updated On :5 நவம்பர் 2018, 8:03 am IST

மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் அழகன் (55). இவர் காரைக்குடியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சுப்பையன் (36) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். 
இந்தநிலையில் காரைக்குடியல் பணியாற்றிய அழகன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரை அழைத்துச் செல்வதற்காக வலசை கிராமத்தில் இருந்து அவரது மகன் சுப்பையன் (26) இரு சக்கர வாகனத்தில் காத்திருந்தார். தந்தை அழகன் வந்தவுடன் அவரை அழைத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் வலசைக்கு சென்றுள்ளார். மாலைப்பட்டி அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சுப்பையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச்சென்ற எம்.சத்திரப்பட்டி போலீஸார்  பலத்த காயம் அடைந்த அழகனை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரியை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.