சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

அஞ்சல் வார விழா: அக்.9-15 ஆம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகள்

அஞ்சல் வார விழாவை முன்னிட்டு அக்டோபர் 9 முதல் 15 ஆம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று முதுநிலை அஞ்சல் அதிகாரி மு.நாகநாதன் தெரிவித்துள்ளார்.

Updated On :8 அக்டோபர் 2018, 7:58 am IST

அஞ்சல் வார விழாவை முன்னிட்டு அக்டோபர் 9 முதல் 15 ஆம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று முதுநிலை அஞ்சல் அதிகாரி மு.நாகநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வடக்குவெளி வீதி தபால் நிலைய முதுநிலை அஞ்சல் அதிகாரி மு.நாகநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஞ்சல்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 முதல் 15 ஆம் தேதி வரை தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 
இதன்படி செவ்வாய்க்கிழமை (அக்.9) உலக அஞ்சல் தினமாகவும், அக்.10 சேமிப்பு வங்கி தினமாகவும், அக்.11 அஞ்சல் ஆயுள் காப்பீட்டு தினமாகவும், அக்.12 தபால் தலை சேகரிப்பு நாளாகவும், அக்.13 வணிக வளர்ச்சி நாளாகவும், அக்.15 கடித தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளை தலைமை தபால் நிலையத்துக்கு வரவழைத்து, அஞ்சல்துறையின் பல்வேறு சேவைகளையும், நவீன தொழில்நுட்ப பயன்பாட்டையும், பயனுள்ள பல சேமிப்புத் திட்டங்களையும் விளக்க திட்டமிட்டுள்ளோம்.
இதைத்தொடர்ந்து மதுரையின் மூத்த தபால்தலை சேகரிப்பாளர்களை அழைத்து பள்ளி மாணவர்களுக்கான பயிலரங்கம், வினாடி வினா போட்டிகளை நடத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகளை அளிக்க உள்ளோம்.
அக்டோபர் 12 ஆம் தேதி அஞ்சல் ஊர்த்தி மூலம் நடமாடும் தபால்தலை கண்காட்சி அமைத்து பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளோம். 
இந்த நிகழ்வின்போது மாணவர்களின் புகைப்படத்துடன் "மை ஸ்டாம்ப்' உடனடியாக அச்சிட்டுத் தர உள்ளோம். சேமிப்பு தினத்தன்று புதிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வழங்கவும், ஆயுள் காப்பீடு தொடர்பான பயனாளிகளின் குறைகளை களையவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
அக்டோபர் 15 ஆம் தேதி நிறைவு நாள் நிகழ்வில் அஞ்சல்துறையின் வணிக சேவைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.