சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திருமங்கலம் பகுதியில் தொடர் மழை: கண்மாய்கள் நிரம்பின

திருமங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும்  தொடர் மழை காரணமாக, கண்மாய்கள் நிரம்பியுள்ளன.

Updated On :8 அக்டோபர் 2018, 8:01 am IST

திருமங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும்  தொடர் மழை காரணமாக, கண்மாய்கள் நிரம்பியுள்ளன.
திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், திருமங்கலம் தாலுகா பகுதிகளில் உள்ள 58 கண்மாய்களுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருமங்கலம் அம்மாபட்டி கண்மாய், புலியூர், புல்லமுத்தூர், தங்களாச்சேரி, தும்மக்குண்டு, சொக்கம்பட்டி ஆகிய 6 கண்மாய்கள் நிரம்பியுள்ளன. இதையடுத்து. மகிழ்ச்சியடைந்த இப்பகுதி விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை தொடங்கிவிட்டனர்.  இதில், அம்மாபட்டி கண்மாய் சில ஆண்டுகளுக்கு முன் பெய்த மழை காரணமாக அடிக்கடி கரை  உடைந்து, விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ந்து பயிர்கள் சேதமாவதும், ஊருக்குள் தண்ணீர் புகுந்து போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தொடர் கதையாக இருந்தது. எனவே, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் 6 மாதங்களுக்கு முன் கண்மாய் தண்ணீர் ஊருக்குள் புகாதவாறு ஒருபக்கம் தடுப்புச் சுவர் மட்டும் கட்டியுள்ளனர். 
ஆனால், வழக்கமாக கண்மாய் உடையும் பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்படவில்லை. எனவே, இப்பகுதியில் கண்மாய் உடைந்து விடாமல் தடுக்க அதிகாரிகள் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதேபோல், திருமங்கலத்தை அடுத்த பெரியபொக்கம்பட்டி கண்மாய் 2 நாள்களுக்கு முன் நிறைந்து, மறுகால் சென்றதில் சிறிய பொக்கம்பட்டிக்கு செல்லும் பாலம் சேதமடைந்துள்ளது. இதனால், இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, கிராம மக்கள் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு சுற்றிச் செல்லவேண்டியுள்ளது. எனவே, பொதுப் பணித் துறையினர் சேதமடைந்துள்ள பாலத்தை சரிசெய்ய வேண்டும்  என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.