இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மதுரை அருகே இளைஞர் அடித்துக்கொலை: நண்பர்களிடம் விசாரணை

மதுரை அருகே இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்டு மருத்துவமனை அருகே சடலத்தை வீசிச்சென்ற

Updated On :8 அக்டோபர் 2018, 7:57 am IST

மதுரை அருகே இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்டு மருத்துவமனை அருகே சடலத்தை வீசிச்சென்ற சம்பவத்தில் அவரது நண்பர்கள் நால்வரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
மதுரை அருகே உள்ள கருப்பாயூரணி  வடக்குத் தெருவைச் சேர்ந்த ஷாஜகான் மகன் ராஜாமுகமது(28). அதே பகுதியில்  இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவர் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஆடுகள் வாங்க செல்வதாகக்கூறி இரு சக்கர வாகனத்தில்  சென்றவர், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 
இந்நிலையில் ராஜா முகமது அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே மயங்கி கிடப்பதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தகவல் அளித்துள்ளார்.  இதையடுத்து குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது ராஜா முகமது உடலில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச்சென்ற கருப்பாயூரணி போலீஸார், ராஜாமுகமது சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரேத பரிசோதனையில் ராஜா முகமது அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராஜா முகமதுவின் சடலம் கிடந்த இடத்தின் அருகே  உள்ள தனியார் மருத்துவமனையில் போலீஸார் விசாரணை நடத்தினர். 
இதில் மருத்துவமனைக்கு வந்த சிலர் ராஜா முகமது விபத்தில் சிக்கி காயமடைந்திருப்பதாக கூறி, அவரை மயங்கிய நிலையில் கொண்டு வந்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். 
இதையடுத்து மருத்துவமனைக்கு அருகே சாலையில் ராஜா முகமதுவின் சடலத்தை விட்டு விட்டு, அவர்கள் தப்பிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் ராஜாமுகமதுவை கொண்டு வந்த  நான்கு பேரின் அடையாளம் தெரிய வந்ததை அடுத்து, நான்கு பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.