திருமங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக, கண்மாய்கள் நிரம்பியுள்ளன.
திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், திருமங்கலம் தாலுகா பகுதிகளில் உள்ள 58 கண்மாய்களுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருமங்கலம் அம்மாபட்டி கண்மாய், புலியூர், புல்லமுத்தூர், தங்களாச்சேரி, தும்மக்குண்டு, சொக்கம்பட்டி ஆகிய 6 கண்மாய்கள் நிரம்பியுள்ளன. இதையடுத்து. மகிழ்ச்சியடைந்த இப்பகுதி விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை தொடங்கிவிட்டனர். இதில், அம்மாபட்டி கண்மாய் சில ஆண்டுகளுக்கு முன் பெய்த மழை காரணமாக அடிக்கடி கரை உடைந்து, விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ந்து பயிர்கள் சேதமாவதும், ஊருக்குள் தண்ணீர் புகுந்து போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தொடர் கதையாக இருந்தது. எனவே, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் 6 மாதங்களுக்கு முன் கண்மாய் தண்ணீர் ஊருக்குள் புகாதவாறு ஒருபக்கம் தடுப்புச் சுவர் மட்டும் கட்டியுள்ளனர்.
ஆனால், வழக்கமாக கண்மாய் உடையும் பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்படவில்லை. எனவே, இப்பகுதியில் கண்மாய் உடைந்து விடாமல் தடுக்க அதிகாரிகள் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், திருமங்கலத்தை அடுத்த பெரியபொக்கம்பட்டி கண்மாய் 2 நாள்களுக்கு முன் நிறைந்து, மறுகால் சென்றதில் சிறிய பொக்கம்பட்டிக்கு செல்லும் பாலம் சேதமடைந்துள்ளது. இதனால், இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, கிராம மக்கள் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு சுற்றிச் செல்லவேண்டியுள்ளது. எனவே, பொதுப் பணித் துறையினர் சேதமடைந்துள்ள பாலத்தை சரிசெய்ய வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


