மதுரை அருகே இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்டு மருத்துவமனை அருகே சடலத்தை வீசிச்சென்ற சம்பவத்தில் அவரது நண்பர்கள் நால்வரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அருகே உள்ள கருப்பாயூரணி வடக்குத் தெருவைச் சேர்ந்த ஷாஜகான் மகன் ராஜாமுகமது(28). அதே பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவர் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஆடுகள் வாங்க செல்வதாகக்கூறி இரு சக்கர வாகனத்தில் சென்றவர், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் ராஜா முகமது அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே மயங்கி கிடப்பதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது ராஜா முகமது உடலில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச்சென்ற கருப்பாயூரணி போலீஸார், ராஜாமுகமது சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரேத பரிசோதனையில் ராஜா முகமது அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராஜா முகமதுவின் சடலம் கிடந்த இடத்தின் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில் மருத்துவமனைக்கு வந்த சிலர் ராஜா முகமது விபத்தில் சிக்கி காயமடைந்திருப்பதாக கூறி, அவரை மயங்கிய நிலையில் கொண்டு வந்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மருத்துவமனைக்கு அருகே சாலையில் ராஜா முகமதுவின் சடலத்தை விட்டு விட்டு, அவர்கள் தப்பிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் ராஜாமுகமதுவை கொண்டு வந்த நான்கு பேரின் அடையாளம் தெரிய வந்ததை அடுத்து, நான்கு பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


