மதுரையில் காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தமிழக காவல்துறையில் காலியாக இருக்கும் காவலர் பணியிடங்களை நிரப்பும் விதமாக கடந்த மார்ச் மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் நடந்த எழுத்துத்தேர்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்டமாக உடல்தகுதித் தேர்வு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற உள்ள தேர்வில் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை உடல் தகுதித்தேர்வுக்கு 778 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 556 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட உடல் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட 222 பேர் உடல் தகுதித் தேர்வில் பங்கேற்கவில்லை. மாநகரக் காவல் தலைமையிட துணை ஆணையர் மகேஷ், உடல் தகுதித் தேர்வுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது. இதனால் இந்த ஆண்டு முறைகேடுகள் நடக்காதவாறு பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜெயலலிதாவின் படத்தை வைத்துக்கொள்ள விஜய் அனுமதித்தார்: கண்கலங்கிய செங்கோட்டையன்!

கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்
பவள விழா, பல்லாங்குழி பாப்பாக்களை தூக்கி எறியுங்கள்! விஜய்

ஐபிஎல் தொடரிலிருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்; சிஎஸ்கேவுக்கு சிக்கல்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

