மதுரை அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் இருந்து ராமநாதபுரத்துக்கு கார் மூலமாக பணம் கொண்டு செல்லப்படுவதாக ஊரகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் வரிச்சியூர் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
இதில் காரில் இருந்த மூவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீஸார் காரில் சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த பைகளில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1 கோடிக்கான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவது தெரிந்தது.
இதையடுத்து கார் மற்றும் ரூ.1 கோடி நோட்டுகளை பறிமுதல் செய்த போலீஸார் காரில் வந்த மூவரையும் கருப்பாயூரணி காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
அவர்கள் பரமக்குடியை சேர்ந்த நவீன்சக்தி, திருப்பாச்சேத்தி அருகே உள்ள பூவந்தியைச் சேர்ந்த ராஜசேகர், தர்மா ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
அவர்களிடம் போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், மதுரை மாவட்டம் மேலூரில் வெளிநாட்டு பணம் மாற்றும் நிறுவனத்தை நடத்தி வரும் சரவணன் தங்களிடம் ரூ.1 கோடியை கொடுத்து அனுப்பியதாகவும், பணத்தை சரியாக கொண்டு சென்று சேர்த்து விட்டால் மூவருக்கும் ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக சரவணன் தெரிவித்ததாகவும் கூறினர். இதையடுத்து மேலூருக்குச்சென்ற தனிப்படை போலீஸார் சரவணனையும் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது மூவரிடமும் அவர் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்து, பணம் எங்கிருந்து பெறப்பட்டது, யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய... புதிய இணையதள முகவரி!

சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

