மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கி ராகிங் கொடுமையில் ஈடுபட்ட இரண்டாமாண்டு மாணவர்கள் 22 பேரை இடைநீக்கம் செய்ய கல்லூரி ராகிங் தடுப்புக்குழு பரிந்துரைத்துள்ளது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு தனியாக விடுதி உள்ளது. இங்கு மூத்த மாணவர்கள் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள முதலாமாண்டு மாணவர்கள் விடுதிக்குள், வியாழக்கிழமை இரவு இரண்டாமாண்டு மாணவர்கள் சுவர் ஏறிக்குதித்து அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கு முதலாமாண்டு மாணவர்களை தாக்கி ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக முதலாமாண்டு மாணவர்கள் புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் ராகிங் தடுப்புக்குழுவிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்துமாறு மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவக் கல்லூரியில் ராகிங் தடுப்புக்குழுவினர் சனிக்கிழமை நடத்திய விசாரணையில், இரண்டாமாண்டு மாணவர்கள் 22 பேர் ராகிங் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 22 பேரையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக்கல்லூரி முதல்வர் டி.மருதுபாண்டியன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவர்களிடம், இரண்டாமாண்டு மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி விடியோ பதிவுகள் மூலம் விடுதிக்குள் நுழைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் இருதரப்பினருடமும் ராகிங் தடுப்புக்குழு விசாரணை நடத்தியுள்ளது. விசாரணையின் அடிப்படையில் இரண்டாமாண்டு மாணவர்கள் 22 பேரை கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்ய ராகிங் தடுப்புக்குழு பரிந்துரைத்துள்ளது. இதையொட்டி கல்லூரி நிர்வாகக்குழு திங்கள்கிழமை கூடுகிறது. அந்தக்கூட்டத்தில் ராகிங் தடுப்புக்குழுவின் பரிந்துரை முன்வைக்கப்பட்டு மாணவர்களின் இடைநீக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ராகிங்கில் ஈடுப்பட்ட மாணவர்கள் 6 மாதம் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவர். இடைநீக்க உத்தரவு மாணவர்களிடம் திங்கள்கிழமை வழங்கப்படும். மாணவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அகில இந்திய மருத்துவக்கவுன்சிலுக்கும் தெரிவிக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு!

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் வடம்பிடித்த பக்தா்கள்
கள்ளச் சந்தையில் வாக்குரிமை!

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

