பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

வஉசி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலரும்,  கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் முன்னாள் துணை மேயர் கு.திரவியம், எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் மாநகரப் பொறுப்புக்குழுத் தலைவர் கோ.தளபதி தலைமையில் பொறுப்புக்குழு உறுப்பினர் பெ.குழந்தைவேல் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்தனர்.  பாஜக சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் சசிராமன் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் சுரேந்திரன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் முருகேசன் தலைமையில் அக்கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கொள்கை பரப்புச் செயலர் தங்க தமிழ்ச் செல்வன் தலைமையில் நிர்வாகிகள் ஜெயபால், பரமநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதச்சார்பற்ற ஜனதாளம் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் க.ஜான்மோசஸ், மாநிலச் செயலர் எஸ்.எம்.செல்லப்பாண்டி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.வேலுச்சாமி,  புறநகர் மாவட்டத் தலைவர் கே.பாக்கியத்தேவர் ஆகியோர் மாலை அணிவித்தனர். முன்னதாக, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
 தமிழர் தேசிய முன்னணி மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் வெ.ந.கணேசன், மாவட்டப் பொருளாளர் சீ.வீராச்சாமி, நிர்வாகிகள் ச.ராமச்சந்திரன், தி.முருகன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.