நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

தாட்கோ திட்டங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காகச் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு

Published On :

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காகச் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
 தாட்கோ வாயிலாக பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. 
  நிலம் வாங்குதல், நிலம் மேம்பாடு, துரித மின்இணைப்பு, தொழில் முனைவு,  இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு,  மருத்துவ மையம், ரத்தப் பரிசோதனை மையம் அமைத்தல், சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி, குடிமைப்பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப் பட்டதாரிகளுக்கு நிதி உதவி,  அரசுப் பணியாளர் தேர்வாணயம் குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதி உதவி, பட்டயக் கணக்கர், செலவுக் கணக்கர், நிறுவனச் செயலர்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
 பதினெட்டு முதல் 65 வயது வரையுள்ள, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருப்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட திட்டங்களின்கீழ் உதவி வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை ட்ற்ற்ல்://ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்.ற்ஹட்க்ஸ்ரீர்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ, கையால் எழுதப்பட்ட விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விண்ணப்பத்தில் கேட்கப்படும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
 மேலும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இதற்கான கட்டணமாக ரூ.60 வசூலிக்கப்படும்.  இத்தொகை விண்ணப்பங்களைப் பதிவு செய்ய பணியமர்த்தப்படும் பயிற்சி பெற்ற கணினி இயக்குபவருக்கு ரூ.30 மற்றும்  புகைப்படம் மற்றும் இதர ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கு ரூ.30 என பிரித்து என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.