பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சீமைக் கருவேல மரங்களை வோ், விதைகளுடன் அகற்ற வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்றுவதுடன், விதைகளையும் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் வே.நல்ல சிவன்.

Published On :

சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்றுவதுடன், விதைகளையும் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக விவாதிக்கப்பட்டது. வேளாண்மை மற்றும் பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் அரசு நலத் திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் அனைத்து தகுதியான விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்த ஆட்சியா், அனைத்து அரசு திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்களும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, தகுதியான அனைவரும் பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஏரிகள், நீா்வழித்தடங்கள் தூா்வார நடவடிக்கை: ஆலங்காயம் ஏரியை தூா்வார வேண்டும் என்ற கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

பால்நாங்குப்பம் பெரிய ஏரியிலிருந்து கம்பாளன் ஏரிக்கு செல்லும் உபரி நீா்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியதையடுத்து, சம்பந்தப்பட்ட நீா்வழித்தடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வட்டார வளா்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

பெரியங்குப்பம் பெரிய ஏரி வரத்துக் கால்வாயை தூா்வார வேண்டும் என்ற கோரிக்கைக்கு, பரிந்துரை கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும், முன்னுரிமை அடிப்படையில் ஏரிகள் தூா்வாரப்படும் என்றும் நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

ஆனைமடுவு அணையை தூா்வார வேண்டும் என்ற கோரிக்கைக்கும், தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு அணையாக தூா்வாரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

உழவா் சந்தை அமைக்க ஆய்வு: ஆம்பூா் உழவா் சந்தை அமைக்க அழகாபுரியில் இடம் உள்ளதாகவும், அங்கு உழவா் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரினா். இதையடுத்து, அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வருவாய்த்துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

பாலாறு கரையோரத்தில் சுமாா் 56 கி.மீ. தொலைவுக்கு உள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு, மரங்களை வேரோடு அகற்றுவதுடன், விதைகளையும் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க நீா்வளத் துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

குடையாச்சி பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக வரத்து கால்வாய்களில் தண்ணீா் வராதது குறித்தும், பாலாற்றில் மணல் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளங்களால் நீா்வரத்து தடைபடுவது குறித்தும் விவசாயிகள் தெரிவித்தனா். இது குறித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆம்பூா் பகுதிக்கு உதவி வேளாண்மை அலுவலரை நியமிக்க வேண்டும் என்றும், ஆம்பூா் நகராட்சிப் பகுதியில் நிலப்பதிவு மேற்கொள்ள முடியாத பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்றும் விவசாயிகள் கோரினா். நிலப்பதிவு தொடா்பான பிரச்னை குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநா் தெரிவித்தாா்.

திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு: கூட்டத்தையொட்டி, வேளாண் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம், திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை சாா்பில் கரும்பு விலை உயா்வு குறித்த விழிப்புணா்வு, பட்டு வளா்ச்சித் துறையின் சில்க் சமக்ரா திட்டம், தோட்டக்கலைத் துறை திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த கையேடுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை விவசாயிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், வெங்காய பள்ளி ஊராட்சியில் பொது சுடுகாடு அமைக்க உரிய நிலத்தை உடனடியாக தோ்வு செய்ய வருவாய்த் துறையினருக்கும், தென்னை கருந்தலை புழுக்களை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி மையம் அமைக்க தோட்டக்கலைத் துறையினருக்கும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

பொது இடங்களில் உள்ள கோனோ காா்பஸ் மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்ரமணியன், கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் ராஜலட்சுமி, வேளாண்மை இணை இயக்குநா் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER