மதுரை காமராஜர் பல்கலைக் கழக மாணவர்கள் அனைவருக்கும் பொருளாதாரமும் கணிதமும் சேர்ந்த புதிய பாடத் திட்டம் வரும் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் தெரிவித்தார்.
பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரியில் கல்லூரி நிறுவனர் தினம் மற்றும் பொன்விழா மலர் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி தலைவர் நா.தியாகராஜன் தலைமை வகித்தார். விழாவில் பொன்விழா மலரை வெளியிட்டு துணைவேந்தர் பேசியது: வீட்டில் 70 வயதுக்கு மேல் முதியோர் இருந்தால் கடவுள் உங்கள் வீட்டில் குடியிருக்கிறார் என நினைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் அனுபவம் நமக்கு மிகவும் தேவையானது. நமது ஒவ்வொரு செயலுக்கும் அவர்கள் நமக்கு தேவைப்படுகிறார்கள். கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகளால்தான் 8 சதவீதமாக இருந்த பெண் கல்வி தற்போது 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. இனிமேல் மாணவர்கள் யாரும் கணிதம் மற்றும் பொருளாதாரம் படிக்காமல் இருக்கக் கூடாது என புது விதிகளை உருவாக்கி வருகிறோம். இது வரும் கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஏனெனில் நாட்டின் பொருளாதாரம் பற்றி தெரியாதவர் கல்வி கற்றவர் அல்ல என்ற நிலை விரைவில் வர உள்ளது. காமராஜர் பல்கலைக் கழகம் உங்களுக்கு பணிசெய்ய காத்துக் கொண்டிருக்கிறது என்றார். நிகழ்ச்சியில் முன்னதாக கல்லூரி முதல்வர் மு.கண்ணன் வரவேற்றார். முன்னாள் பேராசிரியர் மரியஜோசப் சேவியர், துணை முதல்வர் கே.கிருஷ்ணன், பேராசிரியர் ஜெயக்கொடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே! பேரவைச் செயலரிடம் மனு

எம்எல்ஏ- வாக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி! | EPS |
சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டம்! அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
