உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் 16 கிலோ கஞ்சா மற்றும் ரூ.1.32 லட்சம் ரொக்கம் ஆகியவைகளை பறிமுதல் செய்து 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
உசிலம்பட்டி அருகேயுள்ள நடுப்பட்டி பகுதியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ் வழியாக வந்த 3 இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து சோதனை செய்ததில் அவர்களிடம் 16 கிலோ 200 கிராம் கஞ்சா, மற்றும் ரூ.1,32,500 ரொக்கம், ஆகியவை இருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் செய்த விசாரணையில், நல்லமாபட்டியைச் சேர்ந்த ஆதிசிவனாண்டி மகன் சேகர், கீரிபட்டி காமாயி என்ற காந்தமாள், இதே ஊரைச் சேர்ந்த காசிமாயன் மகன் முருகன், கொக்குளத்தைச் சேர்ந்த முத்துக்காளை மகன் ராமராஜ், ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா, பணம், 3 இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் மேலும் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


