எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:40 am IST

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் பங்கேற்ற கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் பங்கேற்று பேசியது: இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு 14 ஆண்டுகள் கடந்து விட்டன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கட்டளைப்படி 2005-இல் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக நான் பதவி வகித்தபோது தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. 
தமிழக முன்னாள் ஆளுநர் பி.சி.அலெக்ஸாண்டர், பிரபல வழக்குரைஞர் ராம்ஜேத்மலானி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே,  தற்போதைய புதுதில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் நிலைக்குழு உறுப்பினர்களாய் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு ஆலோசனை வழங்கினர். 
தகவல் அறியும் உரிமைச்சட்டம் இயற்றப்பட்டு 14 ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து இருக்கிறது. கோடிக்கணக்கான இளைஞர்கள் இந்தச் சட்டத்தைக் கையில் எடுத்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். 
மாநில அரசு,  நீதிமன்றம் உள்ளிட்ட மக்கள் கொடுக்கும் வரிப் பணத்தால் இயங்கும் எந்த துறையும், வரி கொடுக்கும் மக்களுக்கு தகவல் தர வேண்டிய கட்டாயத்தை இச் சட்டம் ஏற்படுத்தி இருக்கிறது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் இந்த சட்டத்துக்கு கட்டுப்படாது என்று சொல்வது வேதனைக்குரியது. நீதிமன்றங்கள் தரும் தீர்ப்புகளின் மீதுதான் தலையிட முடியாது. 
ஆனால் அவற்றின் நிர்வாகங்கள் மக்களின் வரிப்பணத்தில் இயங்குபவை. இந்த சட்டத்துக்கு அவை கட்டுப்பட வேண்டும். அப்போதுதான் இந்த சட்டம் முழுமை அடையும் என்றார். 
நிகழ்ச்சியில் பங்கேற்ற தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்களின் சந்தேகங்களுக்கும் சுதர்சன நாச்சியப்பன் பதிலளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.