தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தெப்பத் திருவிழாவில் வடம் இறுக்கியதில் மாணவர் சாவு

மதுரையில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் வடம் பிடித்த கல்லூரி மாணவர் வடக்கயிறு இறுக்கியதில்

Updated On :23 ஜனவரி 2019, 7:32 am IST

மதுரையில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் வடம் பிடித்த கல்லூரி மாணவர் வடக்கயிறு இறுக்கியதில் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத்திருவிழா வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதில் மதுரை கல்லூரி மாணவர்கள் உள்பட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தெப்பத்தின் வடத்தை பிடித்து இழுத்து வந்தனர். இதில் பெருங்குடியில் உள்ள கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்த அனுப்பானடியைச் சேர்ந்த கோபால் மகன் பிரவீண்குமாரும்(20) தெப்பத்தின் வடத்தை பிடித்து இழுத்து வந்தார். இந்நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக பிரவீண்குமார் தவறி விழுந்ததில் வடக்கயிறு இறுக்கியது. இதில் மூச்சுத்திணறி நினைவிழந்த பிரவீண்குமாரை நண்பர்கள் மீட்டு அப்பகுதியில் உள்ளதனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரவீண்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 
சம்பவம்தொடர்பாக கோபால் அளித்தப் புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.